search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டை கட்லெட்"

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டையில் கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த கட்லெட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 5
    உருளைக்கிழங்கு - 500 கிராம்
    மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
    கரம்மசாலாத்தூள் - 1 ஸ்பூன்
    மிளகுத்தூள்     - 1 ஸ்பூன்
    வெங்காயம் - 1
    தேங்காய் பால் - அரை கப்
    மைதா மாவு - 2 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - 250 கிராம்
    ரொட்டித்தூள் - தேவையான அளவு.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    முட்டை, உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும்.

    வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும்.

    முட்டையை தோல் நீக்கி இரண்டாக வெட்டி வைக்கவும்.

    வெட்டிய முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கி வைக்கவும்.

    மசித்த உருளைக்கிழங்குடன் தேங்காய் பால், வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம்மசாலாத்தூள், மைதா மாவு போட்டு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    உருண்டையை கையில் வட்டமாகத் தட்டி, நடுவில் பாதி முட்டையை வைத்து மூட வேண்டும்.

    இந்த முட்டையை ரொட்டித்தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த முட்டைகளை போட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான முட்டை கட்லெட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×